பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதி 9 பேர் பலி
1 min read
Truck collides with auto: 9 killed
21.2.2024
பீகார் மாநிலம் ராம்கர் சவுக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட லக்கிசராய் – சிக்கந்த்ரா சாலையில் ஆட்டோ ஒன்று 14 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.