சுந்தரபாண்டியபுரம் புதிய தார் சாலை அமைக்கும் பணி
1 min read
Construction of new tarred road in Sundarabandiyapuram
22.2.2024
தென்காசி மாவட்டம்,
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் ரூ.75 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியினை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில், நபார்டு திட்டம் 2023-24ல் அனுமன் நதி பாலம் முதல் சாம்பவர்வடகரை மெயின்ரோடு வரை ரூ.75 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவரும், சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக செயலாளருமான வே.பண்டாரம் முன்னிலை வகித்தார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்து பேசினார். முன்னதாக சுந்தரபாண்டியபுரம் வருகை தந்த அவருக்கு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள பேரறிஞர் அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான வழக்கறிஞர் க.கனிமொழி, ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், மாவட்ட விவசாய தொழிலாளர் அணித்தலைவர் மாரிமுத்து பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன்,முத்தம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், அந்தோணிசாமி, பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் அய்யம்மாள் சண்முகவேல், சீனிவாசகம், ஆனந்த சக்தி, அமுதா, முப்புடாதி மாசாணம், ராஜூ சங்கரன், முனியசாமி , அமுதா,
மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்தியராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆம்பூர் கருணாநிதி, சுரண்டை நகர இளைஞரணி செயலாளர் முல்லை கண்ணன், முன்னாள் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கபில் தேவதாஸ், ஆலங்குளம் இளைஞர் அணி அரவிந்த் திலக், முன்னாள் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் (எ) சண்முகசுந்தரம், ஒன்றிய பிரதிநிதி கணபதிநாடார், சுந்தரபாண்டியபுரம் வார்டு செயலாளர்கள் சங்கரன் அய்யர், தங்கராஜ், கணேசன், பாலகிருஷ்ணன், துரைமணி, முருகையா தேவர், அய்யப்பன் வேளாளர், முத்துபில்டர், அருள்தாஸ், சாமி, பால்ராஜ், மாசாணம், மாரிமுத்து, முப்புடாதிபாண்டியன், கிளைக் கழகச் செயலாளர் ஜெயராஜ் , மாடசாமி, மேலப்பாவூர் முருகன், வழக்கறிஞர் ஹரி, அருணா பாண்டியன் நிர்வாகிகள் பிரம்மநாயகம், ஆனந்த், திருநாவுக்கரசு, ராமமூர்த்தி, ஆறுமுகம், சுரண்டை ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.