கலாஷேத்ரா கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
1 min read
Kalashetra is liable to blame – Madras High Court opined
22.2.2024
பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.
அப்போது, “மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது” என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், “நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்” என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.