June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர் பாஜகவில் இணைந்தார்.

1 min read

Tenkasi panchayat president joins BJP

4.3.2024
தென்காசி மாவட்டம் இடைகால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒரு ஊராட்சி உறுப்பினர் மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ. ராஜேஷ் ராஜா தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டம்
பாப்பாக்குடி ஒன்றியம் இடைகால் ஊராட்சி மன்ற தலைவி திமுகவைச் சேர்ந்த பிரியதர்ஷினிமற்றும் அதிமுகவை சேர்ந்த இடைகால் ஊராட்சி மன்ற 8வது வார்டு உறுப்பினர் செல்லத்துரையும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

புதிதாக பாரதிய ஜனதாக் கட்சியில் இனைந்த வர்களுக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா சால்வை அணிவித்து பாஜக உறுப்பினர் கார்டுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்
திருநெல்வேலி பாராளுமன்ற பொறுப்பாளர் எஸ்.வி.அன்புராஜ் , ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாவட்ட பொதுச் செயலாளர் அருள் செல்வன்,மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், பாப்பாக்குடி ஒன்றிய தலைவர் முருகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் எல்.ஜி.குத்தா லிங்கம், தென்காசி நகர பாஜக தலைவர் மந்திரமூர்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் அவருடன் இடைகால் பாஜக கிளைத் தலைவர் முத்துக்குமார் ஒன்றிய அரசு தொடர்பு பிரிவு தலைவர் நயினார் ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.