June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகர் அஜித் குமாருக்கு அறுவை சிகிச்சை

1 min read

Actor Ajith Kumar underwent surgery

8.3.2024
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் படப்பிடிப்புகளுக்கு நடுவே வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று காலையில் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அவரின் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டது. அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு அஜித் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு கட்டியானது அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.