சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
1 min read
Ponmudi’s 3-year jail sentence suspended in asset hoarding case
11/3/2-024
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து பொன்முடி சார்பில் மூத்த வக்கீல் இ.சி.அகர்வலாவும், விசாலாட்சி சார்பில் வக்கீல் புல்கித் தாரேவும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கவும் கோரியுள்ளனர். மேலும் இடையீட்டு மனுவில் சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அளித்த சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.