தென்காசியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
1 min read
All party consultative meeting in Tenkasi
18.3.2024
தென்காசியில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தென்காசியில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரும், தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏகே கமல் கிஷோர் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்தும், சுவிதா என்ற செயலியில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள். கட்சி ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி பெறும் முறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் எடுத்து கூறினார்.
மேலும் பிரச்சனைகள் ஏதுமின்றி அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவுரைகளை, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார எடுத்துரைத்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக சார்பில் எல்.ஜி.குத்தாலிங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் ஜி.மாடசாமி ஜோதிடர், அதிமுக சார்பில் பொய்கை சோ.மாரியப்பன் திமுக சார்பில் ராமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிட்டப்பா மற்றும் ஆம் ஆத்மி, தேமுதிக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.