இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
1 min read
Notification of Communist Party of India Candidates
18/3/2024
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடந்த பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நாகப்பட்டினம், திருப்பூரில் போட்டியிடுகிறது. இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இன்று 2-வது நாளாக நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். தேசிய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து விவாதித்தனர்.
திருப்பூர் தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள சுப்பராயனை மீண்டும் நிறுத்துவது எனவும் நாகப்பட்டினம் தொகுதியில் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் என்பவரை நிறுத்தவும் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
நாகப்பட்டினம் தொகுதியில் நிற்க கடும் போட்டி ஏற்பட்டது. மாநில நிர்வாகிகள் கருத்துக்களை ஏற்று இறுதியில் சுப்பராயன் மற்றும் வை.செல்வராஜ் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இருவரையும் இன்று மாலை 4 மணியளவில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் போட்டியிடுவதாகவும், நாகப்பட்டினம் தொகுதியில் செல்வராஜ் போட்டியிடுவதாகவும அறிவிக்கப்பட்டுள்ளது.