கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
1 min read
Prime Minister Modi pays tribute to those who lost their lives in the Coimbatore blasts
18.3.2024
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
அதன்படி, இன்று மாலை 5.30 மணியளவில் கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு, கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.
சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.
இதையடுத்து, 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.