திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி- தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு
1 min read
Prime Minister Modi rally in an open vehicle- Volunteers welcome with flower sprinkling
18/3/2024
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்ட பிரதமர் மோடி, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணியை தொடங்கினார்.
சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மோடி.. மோடி.. என உற்சாக குரல் எழுப்பி, பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
வழிநெடுக நின்று வரவேற்பு கொடுக்கும் மக்களவை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தார்.
பிரதமர் மோடியுடன், வாகனத்தில் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உடன் உள்ளனர்.
வாகனத்தில் பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.