தென்காசியில் தேர்தல் நடத்தை ஆலோசனைக் கூட்டம்
1 min read
Election Conduct Consultative Meeting in Tenkasi
19.3.2024
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் தங்கும் விடுதிகள் நகை அடகு கடை நடத்துவோர்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர் களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது:-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் (2024) தொடர்பான அறிவிக்கை 16.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலங்களில் அச்சக உரிமையாளர்கள் திருமண மண்டப உரிமையாளர்கள் தங்கும் விடுதிகள் நகை அடகு கடை நடத்துவோர்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் அனைவரும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127 ஏ இன் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில். உரிய விதிமுறைகளைப் பின்பற்றி தங்களது தொழிலினை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 127-ன் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயல்படும் உரிமையாளர் கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படுவதுடன் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக உரிமையாளர்கள் திருமண மண்டப உரிமையாளர்கள் தங்கும் விடுதிகள் நகை அடகு கடை நடத்துவோர்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.