முதலியார்பட்டியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
1 min read
Inauguration of water festival at Mudaliarpatti
19.3.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டியில்
தென் பொதிகை வியாபாரி கள் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்,
தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு
உறுப்பினர்கள் முகமது யூசுப், தங்கையா, இப்ராஹிம், காதர், பக்கீர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவியாளர் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்று பேசினார்.துணைத்தலைவர் பழக்கடை சுலைமான், திமுக மாவட்ட பிரதிநிதி முகம்மது யாகூப், ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயலாளர் நவாஸ் கான், தண்ணீர் பந்தலை தொடங்கி வைத்தார்.முடிவில்
ருக்சானா முகைதீன் பிச்சை அனைவருக்கும் நன்றி கூறினார். தொடக்க நிகழ்ச்சியில்,அருகில் உள்ள மக்களுக்கு தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.