அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலை எதிர்த்து நமது போராட்டம் அமையும்-சேலத்தில் மோடி பேச்சு
1 min read
Our fight against corruption will be in the next 5 years-Modi speech
18.3.2024
சேலத்தில் நடந்த பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி, என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் பேச்சை தொடங்கினார்.
முதலில் சேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன் என்றார்.
அதன்பின் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-
தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை நாடே ஆச்சரியமாக பார்க்கிறது.
பா.ஜ.க.வுக்கு பெருகும் ஆதரவு தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக 400-க்கும் அதிகமான இடங்களை பெற வேண்டும்.
தமிழகம் வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.
சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன். இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன. சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். ரத்தினவேல் இன்று நம்மிடையே இல்லை, அவரின் நினைவு மட்டுமே உள்ளது.
சேலம் வந்ததும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்த லட்சுமணன் என் நினைவுக்கு வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டில் 2 பாதுகாப்பு வளாகத்தை உருவாக்குகிறது. பாதுகாப்பு வளாகங்களில் ஒன்று தமிழ்நாட்டில் அமைகிறது. தமிழ்நாட்டில் ஒரு ஜவுளி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. சேலம் பகுதியில் ரெயில்வே கட்டமைப்புக்கு ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் இணைந்திருக்கின்ற கூட்டணி தலைவர்களை நான் வணங்குகிறேன்.
உங்கள் ஆதரவோடு தமிழகத்தை புதிய உயரத்திற்கு நாங்கள் எடுத்து செல்வோம். இது எங்கள் அனைவரின் உத்தரவாதம்.
தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான மொழி. எந்த நாட்டில் உலகின் பழமையான மொழி இருக்கிறதோ அந்த நாடு பெருமையுடன் மார்தட்டி கொள்ளும். என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
நமோ இன் தமிழ் செயலியை அனைவரும் பயன்படுத்துங்கள். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நான் தமிழில் பேச தொடங்கி உள்ளேன்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலை எதிர்த்து நமது போராட்டம் அமையும். பாஜக, கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதனிடையே ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண் கலங்கினார்.