தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை – தென்காசி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
1 min read
Chennai – Tenkasi special train operation request for Tamil New Year
23.3.2024
தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்யில் இருந்து தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்புரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் பிளஸ்2, பிளஸ்1 தேர்வுகள் தற்போது நடந்து வரும் நிலையில், விரைவில் கோடை கோ விடு முறை தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கமா கும். இதில் பெரும்பாலான ரயில்கள் கேரளாவை மையமாக கொண்டே இயக்கப்படும். கோடை விடுமு றையை முன்னிட்டும், தமிழ் புத்தாண் டிற்காகவும் நகரங்களில் வசிக்கும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இப்போது முன்பதிவுகளில் இறங்கியுள்ளனர். தென்மாவட்டங் களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங் களுக்கு வரும் ரயில்கள் இப்போதே ஹவுஸ்புல் என்ற நிலையை எட்டத் தொடங்கியுள்ளன.
மேலும் இவ்வாண்டுக்காக தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வருகி றது. தென்மாவட்டத்தில் உள்ள மக் கள் பெரும்பான்மையாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெருநகரங்க னில் வசித்து வருகின்றனர். தமிழ்
புத்தாண்டு விடுமுறை நாட்களுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு அவர் கள் திரும்புவது வழக்கம். இதில் 20 சதவீதம் மக்கள் ரயில் பயணத்தை நம்பியே உள்ளனர். ஆனால் தற் போது பாண்டியன், நெல்லை. பொதிகை, சிலம்பு, அனந்தபுரி உள் விட்ட எக்ஸ்பிரஸ்களில் அனைத்து இருக்கைகளும் முடிந்து காத்திருப் போர் பட்டியல் 200ஐ தாண்டி செல் கிறது. எனவே தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டும், அதை தொடர்ந்து கோடை காலத்திற்காகவும் சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.
இது குறித்து தென்காசி மாவட்ட பயணிகள் நல சங்க தலைவர் பாண்டியராஜன் கூறுகையில், “தற் போது இருக்கும் சூழ்நிலையில் வார விடுமுறை நாட்களில் எக்ஸ்பி ரஸ் ரயில்களில் இருக்கை கிடைப்பதே மிகுந்த சிரமமாக உள்ளது. தமிழ்ப் புத்தாண்டுக்கு தென் மாவட்ட மக் கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு டிக் கெட்டுகள் இல்லை. கடந்த முறை தீபா வளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் சென்னையில் இருந்து தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்டன. அந்த ரயிலுக்கு பொதுமக்கள் இடையே நல்ல வர வேற்பும் காணப்பட்டது. ரயில்வேக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. அதேபோன்று வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பு வருவ நால் 12ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் இருந்தும், 14ம் தேதி நெல்லையில் இருந்தும் தென்காசி வழியாக சிறப்பு இரயில் இயக்கினால் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.” என்றார். நெல்லை- தென்காசி மார்க்கம் மின்மயமாக்கப்பட்டு, அதில் சீரான இடைவெளியில் ரயில்கள் இயக் கப்பட்டு வரும் நிலையில், இரவு நேர ரயில்களை அதிகம் இயக்கிட வேண்டும் எனவும் பயணிகள் விரும்புகின்றனர்.