சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
1 min read
I will come out of jail soon and fulfill my promises: Arvind Kejriwal announced
23.3.2024
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நேற்று டெல்லி கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அமலாக்கத்துறை காவலில் இருக்கும் தனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், டெல்லி மக்களுக்கும் சொல்ல விரும்பிய செய்தியை தற்போது தான் கூறுவதாக அவரது செய்தியை வாசித்தார். அதில், கூறியிருப்பதாவது:-
- நான் உள்ளே இருந்தாலும் சிறையில் இருந்தாலும் எனது வாழ்க்கை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.
- நான் நிறைய போராட்டங்களை சந்தித்து விட்டேன். இந்த கைது என்பது எனக்கு எந்தவிதமான ஆச்சர்யத்தையும் கொடுக்கவில்லை.
- நான் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்களை பற்றிதான் சிந்தித்து கொண்டு இருப்பேன்.
- இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கக்கூடிய சில சக்திகள் இந்தியாவை பலவீனமாக்கி வருகின்றன. அந்த சக்திகளை நாம் அடையாளம் கண்டு அவர்களை வீழ்த்த வேண்டும்.
- அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்குமா, கிடைக்காதா என பெண்கள் யோசிக்கலாம்.
- சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.
- உங்களின் சகோதரனையும் மகனையும் நம்புங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
- நான் சிறையில் இருப்பதால் எந்த பணிகளும் தடைபட்டு விடக்கூடாது.
- பாஜகவினரை யாரும் வெறுக்க வேண்டாம். அவர்களும் நம் சகோதர – சகோதரிகள்தான் இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.
==