மு.க.ஸ்டாலின் 25ம்தேதி நெல்லை வருகை
1 min read
M. K. Stalin’s visit to Nella on 25th
23.3.2024
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரும் 25.03.2024 அன்று நெல்லைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை வரவேற்க விக்கிரமசிங்கபுரம் நகர திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 வேனகளில் சென்று வரவேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது
நெல்லை கிழக்கு மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூடம் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் நகர திமுக அவைத்தலைவர் அதியமான் தலைமை வகித்தார். வீ.கே.புரம் நகராட்சி சேர்மன் செல்வ சுரேஷ் பெருமாள் முன்னிலை வகித்தார். விக்கிரமசிங்கபுரம் நகர திமுக செயலாளர் சிங்கை கி.கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து தொடர்ந்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 25 ம்தேதி கன்னியாகுமரி, நெல்லை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதில் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்க வருகை தர உள்ளார. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நெல்லைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விகேபு ரத்தில் இருந்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 வேன்களில் சென்று வரவேற்று கூட்டத்தில் பங்கேற்பது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்த கூட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகர திமுக துணைச் செயலாளர்கள் செல்வக் குமாரி, ஐயப்பன், பொருளாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி இசக்கிப் பாண்டியன், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பு அணிகளின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் விக்கிரமசிங்கபுரம் நகர திமுக செயலாளர் சிங்கை.கணேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.