July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

1 min read

Village administration officer arrested for taking bribe of 10 thousand near Kadayanallur

23.3.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கடம்பன்குளம் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன் என்ற மகாராஜா என்பவரது மகன் மதன் (வயது 26) இவர் தனக்கு கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப்பட்ட கேட்டு சேர்ந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியிடம் ஆன்லைன் மூலம் விண்ணப் பித்துள்ளார் ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி உரிய ஆவணங்கள் இல்லை என குறிப்பிட்டு விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளதாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து மதன் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியை நேரில் சந்தித்து தனக்கு பட்டா வேண்டும் என்று கேட்டுள்ளார்.அதற்கு மீண்டும் விண்ணப்பித்து விட்டு தங்களது ஆவணங்களை நேரில் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து மதனும் உரிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி இடம் தனிப்பட்ட மாறுதல் செய்து தரும்படி கூறியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி ரூபாய் பத்தாயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

ரூபாய் 10 என்பது மிகவும் அதிகமாக உள்ளது எனவே கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு மதன் கூறியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி அதனை குறைக்க மறுத்துவிட்டார் இதனால் ஆத்திரம் அடைந்த மதன் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியிடம் மதன் கொடுத்துள்ளார்.அந்த லஞ்ச பணத்தை கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி பெற்றுக்கொண்ட போது அவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ , உதவி ஆய்வாளர் ரவி சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வக் கண் ராஜா தலைமை காவலர்கள் வேணுகோபால் பிரபு கோவிந்தராஜன் கணேசன் பிரவீனா ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமியை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.