பறக்கும்படை தவறு செய்தால் புகார் செய்யலாம்- தென்காசி ஆட்சியர் தகவல்
1 min read
Complaint can be made if flying force makes a mistake- Tenkasi collector informs
2.4.2024
பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர்களின் வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது இதில் ஏதாவது குறைபாடுகள் மற்றும் செயல்பாடுகளில் தவறு இருந்தால் பொதுமக்கள் கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்று தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ,மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, தென்காசி மாவட்டத்தில் வாகனச் சோதனையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி வாகனச் சோதனையின் போது பணம் மற்றும் பிற பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்கும் பொதுமக்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களை சம்பவ இடத்திலேயே சமர்பித்தும் usenb சோதனை அலுவலர்களால் கைப்பற்றப்பட்டாலோ மற்றும் சோதனையின்போது பொதுமக்களிடம் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தும் நிலை ஏற்படுமாயின்
பொதுமக்கள் அது குறித்த தங்களது புகாரினை தென்காசி மாவட்ட தேர்தல் குறைதீர்க்கும் குழுவில் बीवा அலுவலர்களான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர். மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ கைபேசி எண்.7305089505, மாவட்ட கருவூல அலுவலர், கே.தவமணி ஆரோக்கிய ராஜ் கைபேசி எண்8056717191 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ம.இரங்சலின் மனோ பெல்சியா 9443184598 ஆகிய அலுவலர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்..