தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் அடித்துக்கொலை?
1 min read
Power plant contractor beaten to death in Tuticorin?
5.4.2024
தூத்துக்குடி புதுக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மர் (வயது 47). இவர் தூத்துக்குடி அனல் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு போன் செய்துள்ளனர்.
அப்போது அதில் பேசியவர்கள் தர்மர் கூட்டம்புளி கால்வாய் அருகே இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்க்கும்போது தர்மர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மர் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்துக் கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.