தினத்தந்தி முன்னாள் ஆசிரியர் ஐ. சண்முகநாதன் காலமானார்
1 min read
Former editor of Dinantathi I. Shanmuganathan passed away
3.4.2024
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் தினத்தந்தி ஐ. சண்முகநாதன் (90) முதுமை காரணமாக இன்று (3.5.2024, வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணி அளவில் காலமானார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தி நாளிதழில் ஆசிரியராகப் பணியாற்றியவர். வரலாற்றுச் சுவடுகள் போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார். நாதன் என்ற பெயரில் ஏராளமான நாவல்களையும் எழுதியுள்ளார். அவருடைய எழுத்து ஆற்றொழுக்காகவும் விறுவிறுப்பாகயும் இருக்கும். அவருடைய படைப்புகளை எடுத்தால் மூட மனம் வராது. அந்த அளவுக்கு எழுத்து வல்லமை படைத்தது.
சண்முகநாதனுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டது.
அவருடைய உடல் சென்னை முகப்பேரில் உள்ள அவர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முகவரி: பிளாட் எண்-1001, ஏரி ஸ்கீம், முகப்பேர் (நொளம்பூர் காவல் நிலையம் அருகில்), சென்னை.
இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை நடைபெறும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.