மாதாபட்டணம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
1 min read
Mathapatanam School Alumni Meet
3.5.2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாதாபட்டணம் ச .ச.வி மேல் நிலைப்பள்ளியில் 1999-2000 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குமாதாபட்டணம் ச.ச.வி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா தலைமை தாங்கினார்
முன்னாள் தலைமை ஆசிரியர் தங்கசாமி, முன்னாள் ஆசிரியர்கள் ஜமுனா பாய், தமிழரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் கலந்து கொண்டு பள்ளியில் கடந்த காலங்களில் நடைப்பெற்ற நிகழ்வுகளை பற்றி கலந்துரையாடினர்கள் .முன்னதாக முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கொளரவிக்கபட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஜோதி செல்வம்,
அசோக்குமார், ஆனந்தபிரசன்னா, லூயிஸ் துரை, அருண் ,சேகர்,
லிங்கதுரை. சோலைவாசகம். பாலசுப்பிரமணிய ராஜா,முன்னாள்
மாணவிகள் லீமாரோஸ்,ஜெயமேரி, விஜயா, சாந்தி, ஹேமலதா.
ரொஸ் , மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாதாபட்டணம் ச .ச.வி மேல் நிலைப்பள்ளியின்
முன்னாள் மாணவர்கள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.