விபத்தில் கால் முறிந்த சிவகாமிபுரம் திமுக பிரமுகருக்கு உதவி
1 min read
Sivagamipuram DMK leader who broke his leg in an accident helped
3.5.2024
தென்காசி தெற்கு மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே
விபத்தில் காயமடைந்த திமுக நிர்வாகிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மருத்துவ உதவித்தொகை வழங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் பேரூர், சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. வார்டு திமுக செயலாளரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இது பற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், நேரில் சென்று ராஜதுரையிடம் நலம் விசாரித்தார். மேலும் மாவட்ட திமுக சார்பில் ரூ.5 ஆயிரத்தினை மருத்துவ உதவித்தொகையாக அவரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட திமுக பிரதிநிதி சீ.பொன்செல்வன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கச்சாமி, முன்னாள் பேரூர் செயலாளர் ராமசாமி, கவுன்சிலர் இசக்கிமுத்து, வார்டு செயலளார் சுடர்ராஜ், சந்திரமோகன், செல்வன், சமுத்திரபாண்டி, சேகர், துரைசாமி, உள்ளிட்ட மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.