கடையநல்லூரில் மின்வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
1 min read
Tree sapling ceremony organized by Power Board at Kadayanallur
18.5.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து
புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு செயற்பொறியாளர் அலுவலக வாளகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து மின் பகிர்ந்தளிந்தல் மற்றும் மின் விநியோகம் குறித்த சிறப்பு ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மழை முன்னதாக தொடங்குவதாலும் வானிலை அறிக்கை படியும், தற்போது கோடை காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின் விநியோகம் வழங்கல், மற்றும் முதன்மை பணியாக அரசு மருத்துவமனைகள் , குடிநீர் ஆதாரங்கள் ,ஆகியவற்றுக்கு தங்கு தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடையநல்லூர் கோட்டத்தில் மின் விநியோகம் வழங்கும் மின் பாதைகள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்து சூறைக்காற்று காரணமாக மின் தடங்கல் ஏற்படும் என தெரியவரும் மரக்கிளைகளை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உடனடியாக அப்புறப்படுத்து வதற்கும், மின்தடங்கல் ஏற்பட்டால் அனைவரும் ஒருங்கிணைந்து விரைவாக பணிகள் மேற்கொண்டு விரைவில் மின் விநியோகம் வழங்க மேற்பார்வை பொறியாளர் உத்திரவிட்டார்.அதனை தொடர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு செயற்பொறியாளர் அலுவலக வாளகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் நாரணாபுரம் துணை மின்மயத்தில் பழுதான ஆற்றல் திறன் மின்மாற்றி அகற்றப்பட்டு புதிய ஆற்றல் திறன் மின்மாற்றி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிப்பதற்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வு கூட்டத்திலும் மற்றும் அனைத்து நிகழ்வுகலிலும் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.