தென்காசி மாவட்டத்தில் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்று- மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
1 min read
Birth Certificate with Child Name in Tenkasi District – District Magistrate Information
19.5.2024
தென்காசி மாவட்டத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கும் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்
ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 01.01.2000-க்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டு ள்ள குழந்தை பிறப்புகளுக்கும். 01.01.2000 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயருடன் பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதும் அக்குழந்தையின் தோற்றத்தை (பிறப்பை) சட்டப்படி ஏற்றுக்கொள்கிற முதல் நடவடிக்கையாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 2000-ன் படி. ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200/- தாமதக் கட்டணம் செலுத்தி பெயரினை பதிவு செய்திடலாம். ஆனால், 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. மேலும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அச்சான்றானது முழுமைபெறும்.
பிறப்புக்களை பதிவு செய்வது ஒரு தனிநபரின் அடையாள ஆதாரமாக விளங்குவதுடன், அவர் எந்த இடத்தைச் சார்ந்திருக்கிறாரோ. அந்த இடத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கான முக்கியமான அடிப்படைத் தகவல்களையும் அளிக்கிறது.
இந்நிலையில், இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி. 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும். 01.01.2000 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டிருப்பின் பிறப்பு பதிவு சான்று வழங்கிய அலுவலரிடம் (நகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர். பேரூராட்சி) உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஆதார் நகல், பெயர் பதிவு செய்யப்படாத பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் திட்டவட்டமாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறுறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.