தங்கையை தகாத உறவுக்கு அழைத்ததால், போதை நண்பர் வெட்டிக்கொலை
1 min read
Drugged friend hacked to death because he invited his younger sister to have an inappropriate relationship
19/5/2024
தங்கையை தகாத உறவுக்கு அழைத்த ஆத்திரத்தில் போதை நண்பரை வெட்டிக்கொன்ற வாலிபரை கைது செய்தனர்.சென்னை,கொடுங்கையூர்,எழில்நகரை சேர்ந்தவர் பாஸ்கர்,இவரது மகன் ரஞ்சித்குமார்(30), இவர் பாரிமுனையில் கூலி வேலை பார்க்கிறார். இவர் சிறு வயதில் செய்த குற்றத்திற்காக சிறார் சிறைக்கு சென்றார். இவரது நண்பர் ராயபுரத்தை சேர்ந்த சரவணன், ரஞ்சித்குமார் வீட்டிற்கு வந்தார். இருவ்ரும் அமர்ந்து மது அருந்தினர். பின் இருவரும் மொட்டை மாடியில் படுத்து இருவரும் தூங்கினர். காலையில் சரவணனுக்கு போதை தெளியவில்லை. அப்போது, ரஞ்சித்குமாரிடம் உன் தங்கை எனக்கு வேண்டும் என கூறியுள்ளார். ஆரம்பத்தில் கோபப்படாத ரஞ்சித்குமார், உனக்கு போதை தெளியவில்லை., வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனாலும் சரவணன் உன் தங்கை வேண்டாம்.உன் தாய் இருந்தால் அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார்,வீட்டில் இருந்த அரிவாள் போன்ற கத்தியை எடுத்து முகம் ,கை ,கால் என சரவணனை சரமாரியாக வெட்டிக்கொன்றார். தகவல் கிடைத்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.