July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூரில் விவசாயிகளுக்கு போலியாக இலவச மின் இணைப்பு வழங்கி பல லட்சம் மோசடி – 2 பேர் சஸ்பெண்டு

1 min read

In Kadayanallur farmers were given fake free electricity connection and scam of several lakhs – 2 employees suspended

18.5.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் விவசாயிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு போலியாக இலவச மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அலுவலர்கள் இரண்டு பேர் சஸ்பெணட் செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இலவச மின் இணைப்பு வாங்கித் தருவதாக கூறி இலட்சக்கணக்கில் விவசாயிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான மின் இணைப்பை வழங்கி விவசாயிகளை ஏமாற்றிய கடையநல்லூர் மின்வாரிய பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மின் வாரிய எல்கைப் பகுதிக்கு உட்பட்ட காசிதர்மம் பகுதியில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வாங்கித் தருவதாக கூறி பல விவசாயிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு, ஒரே பெயர் கொண்ட விவசாயிகளின் மின் இணைப்பை அதாவது, உதாரணமாக சுப்பையா என்ற ஒரு விவசாயி முன்னதாகவே இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், அதே பெயர் கொண்ட மற்றொரு சுப்பையாவுக்கு அதே பேரில் இலவச மின்விநியோகம் கொடுத்து மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அது தொடர்பாக கடையநல்லூர் மின் வாரிய உதவி இயக்குனர் விசாரணை நடத்தி மின் பொறியாளரான முகமது ரபிக் மற்றும் கணக்கு மேற்பார்வையாளரான முருகேசன் உள்ளிட்ட இரண்டு மின்வாரிய ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தனர்.

இந்த நிலையில், முறைகேடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் பணம் கொடுத்து தட்கல் முறையில் பெற்ற மின் இணைப்பை தற்போது ஏன் துண்டித்தீர்கள் எனக் கூறி கடையநல்லூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, அவர்களிடம் மின்வாரிய செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மிகப்பெரிய அளவில் இலட்சக்கணக்கில் விவசாயிகளிடம், மின்வாரிய ஊழியர்களே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடையநல்லூர் பகுதியில் விவசாயிகளை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு போலியான மின் இணைப்புகளை வழங்கிய மின் பொறியாளர் முகமது ரபிக் மற்றும் கணக்கு மேற்பார்வையாளர் முருகேசன் இருவரையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு மின்வாரிய அலுவலர்களால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.