July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

முதலியார்பட்டி பகுதியில் தொடர் திருட்டு- 2 பேர் கைது

1 min read

Serial theft in Mudaliarpatti area- 2 arrested

20.5.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள
முதலியார்பட்டி பகுதியில் பல்வேறு கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி பகுதியில் கடந்த 5.5.24 இரவில், காந்தி நகரில் உள்ள, பக்கீர் மைதீன் என்பவரின், ராஜா டீஸ்டால் என்ற கடையிலும்,
இந்திரா நகரில் உள்ள தமீம் அன்சாரி என்பவரின் மஸ்த் செப்பல் என்ற செப்பல் கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டன.

காவல்துறையினர் திருடனை தேடி வந்த நிலையில், தொடர்ச்சியாக 8.5.24 இரவில், திருமலையப்பபுரத்தில் உள்ள, இப்ராஹிம் என்பவரின்,
பிஸ்மி பேன்ஸி ஸ்டோர் என்ற கடையிலும், முதலியார்பட்டியில்
10.5.24 இரவு ஸ்டூடன்ட் கம்ப்யூட்டர் என்ற கடையிலும்,11.5.24 இரவு
ரஹ்மத் நகரில் உள்ள, அப்பாஸ் என்பவருக்கு சொந்தமான
டிஎஸ்எம்.ஹார்டுவேர்ஸ் கடையிலும், 17.5.24 பேரமுதன் ஜெராக்ஸ் – கெமிக்கல்ஸ் அப்துல் காதர் என்பவரின் உமர் டீஸ்டால் ஆகிய கடைகளில் இரவு நேரங்களில் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டுச்சம்பவங்கள் நடைபெற்றன. இது சம்பந்தமாக வியாபாரிகள் தொடர்ந்து கடையும் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர்.இது தொடர்பாக கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் வேல் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி வந்தனர்.

இந்நிலையில் முதலியார்பட்டி தென்பொதிகை வியாபாரிகள் சங்கம் சார்பில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.அதனைத் தொடர்ந்து போலீசார் முதலியார்பட்டி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் சுற்றி திரிந்த இருவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் கடையநல்லூர் புளியமுக்கு தெருவை சேர்ந்த மசூது என்பவரது மகன் முகம்மது இப்ராகிம் (வயது 25), கடையநல்லூர் பரசுராமன் தெருவை சேர்ந்த காஜாமைதீன் என்பவரது மகன் அப்துல் பகத் (வயது 20) ஆகியோரை போலீசார் கைது செய்து. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முதலியார்பட்டியில் இருவரும் ஒன்றரை மாதம் தங்கியிருந்து தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

முகம்மது இப்ராஹிம், அப்துல்பகத் இருவரும் முதலியார்பட்டியில் வீதி, வீதியாக சென்று கடைகள் அடைக்கப்படும் நேரம், திறக்கப்படும் நேரம் என்பது தொடர்பாக இவர்கள் இருவரும் நோட்டமிட்டு வந்துள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் திட்டமிட்டு கடை களுக்குள் புகுந்து திருடியுள்ளனர். அப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் சிக்க மாட்டோம் என்று கருதியள்ளனர். ஆனால் தொடர் திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் போலீசார் முதலியார்பட்டி முழுவதும் அங்குலம், அங்குலமாக தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனால் போலீசார்வலையில் சிக்கினர்.

அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து பூட்டை உடைக்கக்கூடிய இரும்பு ராடு உள்ளிட்ட பொருட் கள் பறிமுதல் செய்யப்பட் டது. முகமது இப்ராஹிம் மீது புளியங்குடி, வாசு
தேவநல்லூர், கடையநல் லூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.