ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தியின்நினைவிடத்தில் காங்கிரசார் மரியாதை
1 min read
of Rajiv Gandhi in Sriperumbudur Honorable Congressmen at the memorial
21.5.2024
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரசார் மரியாதை செலுத்தினர். இதில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை கல்ந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது நினைவாக ராஜீவ் காந்திக்கு ஸ்ரீபெரும்புதூரில் அதே இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. இங்கு வருடம் தோறும் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசு, கே.வி தங்கபாலு, கன்னியாகுமாரி எம்.பி விஜய்வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி நினைவு தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமங்கலம் ஐயப்பன், நகரத் தலைவர் எஸ்.ஏ.அருள்ராஜ் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்ரீதர் வட்டாரத் தலைவர்கள் நிக்கோலஸ் புஷ்பராஜ் முன்னாள் வட்டார தலைவர் வல்லக்கோட்டை புன்னியநாதன் அசோகன் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் தங்கராஜ் நகர தலைவர் வரதன் அனிஷ,பரத்,வாசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.