ஊத்துமலை அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
1 min read
A teenager was hacked to death near Uthumalai
22.5.2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதியில் இரவில் ஓட, ஓட விரட்டி வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் கனகராஜ் (வயது 26). கூலித்தொழிலாளியான இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இருந்தார்.
அப்போது வீட்டின் பின்புறம் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் மர்மகும்பல் வந்தது. அதை பார்த்த கனகராஜ் அங்கிருந்து ஓடியுள்ளார். எனினும் அவரை ஓட, ஓட விரட்டிய அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அவரது சத்தம் கேட்டு அவரது தந்தை நடராஜன் வெளியே ஓடிவந்தார் அவரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
அரிவாள் வெட்டு விழுந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். நடராஜன் படுகாயங்களுடன் கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திறக்கு விரைந்து வந்த போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த நட ராஜனும் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்விரோதத்தில் பழிக் குப்பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
மேலும், இந்த பயங்கர கொலை குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மாம கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஊத்துமலை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.