வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் இரண்டு அரசு பஸ்கள் மீது கல்வீச்சு
1 min read
Two government buses were pelted with stones near Vasudevanallur in the middle of the night
22.5.2024
தென்காசி மாவட்டம், வாசுதேவ நல்லூர் அருகே நள்ளிரவில் இரண்டு அரசு பஸ்கள் மீது கல்வீசி தோக்கி கண்ணாடியை உடைத்த கும்பலை போலீ சார் தேடி வருகின்றனர்.
தென்காசியில் இருந்து மதுரைக்கு நேற்று முன்தி னம் இரவு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம் சுந் தரபாண்டியம் சாலியர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மாரிமுத்து (49) என்பவர் பஸ்சை ஓட் டிச் சென்றார். வத்திராயி ருப்பு வடக்கு அக்ரகாரத் தைச் சேர்ந்த சந்திரன் மகன் -பெரியசாமி (49) என்பவர் நடத்துனராக இருந்தார். ஆண்கள், பெண்கள், குழந் தைகள் உள்ளிட்ட 35 பேர் பயணித்தனர். பஸ் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ் சாலையில் வாசுதேவநல் லூர் அருகே திருமலாபுரம் விலக்கு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் சென்ற போது 4 இருசக்கர வாக னத்தில் முகத்தில் துணியை கட்டி மறைத்தவாறு வந்த 12 பேர் கும்பல் பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பஸ் நின்றதைய டுத்து அக்கும்பல் பஸ்சின் கண்ணாடி, விளக்குகள் அனைத்தையும் உடைத் துவிட்டு வாகனங்களில் தப்பி சென்றனர்.
இதுகு றித்து பஸ் டிரைவர் மாரிமுத்து, கண்டக்டர் பெரியசாமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் (சிவகிரி) சண்முகலட்சுமி, (வாசு) கண்மணி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதி யில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஐந்து, ஐந்து பஸ்களாக போலீஸ் பாது காப்புடன் அனுப்பி வைக் கப்பட்டன.
இது போல் வாசுதேவநல்லூரில் இருந்து நள்ளிரவு சங்கரன் கோவில் நேரக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்த பஸ்சை சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் முதல் தெருவைச் சேர்ந்த டிரைவர் கணபதி மகன் குமார் (வயது48)
ஓட் டினார். பெரும்பத்தூரைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சங்கர் (வயது 56) நடத்துனராக பணியில் இருந்தார். சங்கனாப்பேரி பகுதியில் பஸ் சென்றபோது அடை யாளம் தெரியாத 2 பேர். பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது செங்கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து குத்தியதில் டிரைவர் குமார் காயமடைந்ததார். பஸ்சில் பயணம் செய்த பய ணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து டிரைவர், கண்டக்டர் அளித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லையில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக்ராஜன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக கொலை செய்யப்பட்டார். அதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ் பெக்டர் கண்மணி, சந்தே கத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாசுதேவநல்லூர் பகுதியில் நள்ளிரவில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.