தென்காசி மாவட்டத்தில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது- ஆட்சியர் அறிவிப்பு
1 min read
Tenkasi District Tensing Norge National Adventure Award- Collector Notification
23.5.2024
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2023- ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் சார்பாக டென்சிங் நார்கே தேசிய சாகச விருது”- வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் சார்பாக தேசிய அளவில் வீர, தீர மிக்க
செயல்புரிந்தவர்களுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்கான துணிச்சலான நடவடிக்கைகள் நிலம். நீர் மற்றும் வான்வெளி மண்டலத்தில் சாகசம் செய்தமைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருதானது 2021 2022 2023 ஆகிய ஆண்டுகளில் சாகசம் புரிந்ததாக இருக்க வேண்டும். மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் இந்திய அரசு இணையதள முகவரியான https://awards.gov.in ρισού 11.06.2024 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் (ம) அதன் புகைப்படங்களுடன் கூடிய முழு ஆவண விபரங்களை புத்தக வடிவில் தயார் செய்து (3 எண்ணம்) மாவட்ட விளையாட்டு அலுவலகம். 163 ஆ ரயில்வே ரோடு, தென்காசி என்ற முகவரியில் நேரில் 30.05.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ. ரயில்வே ரோடு, தென்காசி என்ற முகவரியில் நேரிலோ (அ) 04633 212580 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.