இந்திய விமானப்படையில் இசைக்கலைஞர் பணியிடம்-தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்
1 min read
Musician Vacancies in Indian Air Force- Tenkasi District Collector Information
25.5.2024
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப்படை சார்பில் பெங்களுரில் அமைந்துள்ள 7வது விமானப்படை தேர்வு மையத்தில் அக்னிவீர்வாயு இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 03.07.2024 முதல் 12.07.2024 வரை நடைபெற இருக்கிறது. இதில் 10ஆம்வகுப்புதேர்ச்சி பெற்று மற்றும் இசைக்கருவிகளில் வாசிக்க தேர்ச்சி பெற்ற ஆர்வலர்கள் https://agnipathvayu.cdac.in/ 5 22.05.2024 05.06.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுநடைமுறை மற்றும் பிற விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். எனவே தென்காசி மாவட்டத்தை சார்ந்த இசைக்கலைஞர் ஆர்வலர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெரிவித்துள்ளார்.