ஐந்தருவி பகுதியில் 10 அடி நீள மலைப்பாம்பு
1 min read
10 feet long python in Aindaruvi region
26.5.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று காலையில் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குறித்து கொண்டிருந்த போது அருவிக்கு அருகில் 10 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு வந்துள்ளது.
ஐந்தருவி அருவிக்கரை பகுதியில் குரங்கை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் நின்று கொண்டிருந்த சுமார் பத்து அடி கொண்ட மலைப்பாம்பினால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பினை மீட்டு வனத்தில் விட்டனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் ஐந்தருவி பகுதியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அருவி கரையில் மேற்பகுதியில் உள்ள கிளையில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று குரங்கினை விழுங்கியவாறு நின்று கொண்டிருந்ததை கண்ட சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் .
தகவலறிந்து அங்கு வந்த செங்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடித்த நிலையில் பாம்பால் வழங்கப்பட்ட குரங்கு ஏற்கனவே இறந்திருந்தது தொடர்ந்து மலைப்பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர் பாம்பினை குற்றாலம் மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
மலைப்பாம்பு அருவியில் மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து நீரில் அடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.ஐந்தருவி அருவிக்கரை பகுதியில் மலை பாம்பு பிடிபடிப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.