மதுரை – செங்கோட்டை பேருந்துகள் குற்றாலம் வழியாக இயக்க கோரிக்கை
1 min read
Request to operate Madurai – Sengottai buses via Courtalam
28.5.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம்
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் பொதுச் செயலாளர் ஜான் டேவிட் நாடார் பொருளாளர் சுப்ரமணியன் தென்காசி மாவட்ட தலைவர் ராஜ் நயினார் டிஎன்யூ மாத இதழ் கௌவுரவ ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்த கோரிக்கை மனுவில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக புகழ்பெற்று விளங்கும் குற்றாலத்தின்
சீசன் தொடங்கிவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் குற்றாலத்திற்கு குளிப்பதற்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது குற்றாலத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் தென்காசியில் இருந்து பேருந்துகளில் குற்றாலம் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் சுற்றுலா பயணிகளின் நலன்களுக்காக அரசு விரைவு பேருந்துகள் மற்றும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு வருகை தருகின்ற பேருந்துகள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தருகின்ற பேருந்துகள் இதுபோன்ற தொலை தூரத்தில் இருந்து செங்கோட்டைக்கு வருகை தருகின்ற பேருந்துகள் அனைத்தும் குற்றாலம் வழியாக வருவதற்கும் செல்வதற்கும் ஆவண செய்ய வேண்டும்.
மேலும் தென்காசி பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தின் சார்பில் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது தற்போது இந்த முன் பதிவு மையம் தனியார் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்டு தனி நபர்கள் இருந்து கொண்டு பயண ச்சீட்டு முன்பதிவு செய்ய வருபவர் களிடம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதை தனியார்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அதனால் இங்கு டிக்கெட் கொடுக்கப்படாது என்றும் அருகில் இருக்கின்ற கம்ப்யூட்டர் சென்டரில் தான் டிக்கெட் கொடுக்கப் படுகிறது என்று சொல்லி வருகிறார்கள்.
ஏற்கனவே தென்காசி பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து முன் பதிவு மையமாக செயல்பட்டு வந்த கட்டிடம் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டு தனியார் நோட்டுப் புத்தகங்கள் வைக்கும் குடோனாகவும் பாதி அலுவலகம் ஆகவும் செயல்பட்டு வருகிறது. அதனால் தென்காசி பேருந்து நிலைய த்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்கனவே இயங்கி வந்த முன்பதிவு மையத்தை மீண்டும் திறந்து முன்பதிவு மையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பணியாளர் நியமனம் செய்து பொதுமக்கள் விரைவு பேருந்தில் செல்வதற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.