July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு முதல்வருக்கு கோரிக்கை

1 min read

Tenkasi District Panchayat Council Leaders Association request to the Chief Minister

28.5.2024
தென்காசி மாவட்டம் உள்ளிட்ட 9 மாவட்ட 2600 ஊராட்சி மன்றகளை 5 ஆண்டு காலம் பதவிகாலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று
தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், தமிழக ஊராட்சி கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளருமான கோவிந்தப்பேரி டி.கே.பாண்டியன் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தென்காசி, திருநெல்வேலி. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளகுறிச்சி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டகளுக்கு தேர்தல் நடந்து 21.10.2021 பதவியேற்றோம். பதவி ஏற்றபோதும், ஓட்டு கேட்கும் போதும் நாங்கள் பல வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் செய்து முடிப்போம் என்று கொடுத்து உள்ளோம், எங்கள் ஓன்பது மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு வருகின்ற டிசம்பரில் தேர்தல் நடத்துவது. நாங்கள் வகித்துவரும் பதவிற்கே இழுக்கான செயல், ஊராட்சி பொது மக்கள் எங்களை கொடுத்த வாக்குறிதியை செயல்படுத்தாத தலைவர்கள் என்று விமர்சிப்பார்கள்

2019ல் உள்ள 27 மாவட்டத்திற்கு 5 ஆண்டு முடிவடைந்துவிடும் தேர்தல் நடத்துவது நியாயம் தான்? ஆனால் 3 ஆண்டு பதவி வசித்த ஊராட்சி மன்றகளை கலைத்து விட்டு தேர்தல் நடத்துவது பதவியை பறிப்பது நாங்கள் ஏற்று கொள்ளமாட்டோம். தயவு செய்து தமிழக முதல்வர் அவர்கள் 2600 ஊராட்சி மன்ற தலைவர்கள் துணை தலைவர்கள் உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சேர்த்து பார்த்தால் 32000ம் மக்கள் பிரதி நிதிகளும், 2 கோடி பொது மக்களையும் வஞ்சிக்கும் செயல் ஆகவே கருனை உள்ளம் கொண்ட முதல்வர் அவர்கள் மறு பரிசிலனை செய்து எங்கள் ஊராட்சிகளுக்கு, நிதிகளை அதிகமாக்கி வழங்கவும். நாங்கள் செய்கின்ற சேவை உங்கள் கரங்களை வலிமையாக்கும் நாங்கள் பல கட்சியில் இருந்தாலும் உங்கள் நிர்வாகத்திற்கு சுட்டுபட்டு மனிதான்மையுடன் செயல்பட்டு வருகின்றோம்.

ஆகவே தயவுசெய்து எங்கள் பதவி காலத்தை அரசியல் சட்டப்படி ஐந்து ஆண்டுகள் உறுதிபடுத்த வேண்டும் என உங்களை பணிவுடன் தாழ்மையுடன், கேட்டு கொள்கின்றோம். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமானால் 27 மாவட்ட ஊராட்சி தலைவர்களின் காலத்தை நீடித்தோ அல்லது தனி அதிகாரி மூலமாகவோ தள்ளி வைத்து ஒன்றாக ‎‬‎ நடத்தலாம். அவர்கள் 27 மாவட்டம் ஐந்து ஆண்டுகள் பதவி முடியும் போது எங்களுக்கு 3 ஆண்டு காலம் தான் ஆகும். ஆகவே மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் 5 ஆண்டுகள் பதவியை நீடிக்க கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு
தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், தமிழக ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப் பாளருமான கோவிந்தப்பேரி டி.கே.பாண்டியன் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.