தென்காசி மாவட்ட துப்பாக்கி சுடுதல் போட்டி – பரிசளிப்பு விழா
1 min read
Tenkasi District Shooting Competition – Award Ceremony
28.5.2024
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட் ரைவில் கிளப் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தென்காசி அருகே மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் உள்ள , தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பில் வைத்து திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப் சார்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராஜபாளையம், விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இடையேயான 2024 ம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப் செகரட்டரி முகமது ரஷீத் வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஷன் செகரட்டரி, வேலு சங்கர் , இவ்விழாவிற்கு தலைமை ஏற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், மருத்துவம், பொறியியல் மற்றும் இதர பட்ட படிப்புகளிலும் இவ்விளையாட்டிற்கு ஒதுக்கீடு உண்டு என்றும் மேலும் இவ் விளையாட்டு பயிற்சியினால் மாணவ மாணவியர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் ஜூலை மாதம் இவ்விளையாட்டுக்கான மாநில அளவிலான போட்டி நடைபெற இருப்பதாக தெரிவித்தார். அதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவ மாணவியர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.
மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியையும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஏற்பாடுகளையும் திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப் செகரட்டரி,முஹம்மது ரஷீத் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சக்தி மணிகண்டன், முர்ஷீத் அகமது ரிஸ்வி, ஷமீமா பர்வின், டேலிஸ் மைதீன், கார்த்திகேயன், சசி ஆகியோர் செய்தனர். கன்னியாகுமரி ரைபிள் கிளப் செகரட்டரி டேனியல் , ராஜபாளையம் செகரட்டரி ஜெயசீலன் , தூத்துக்குடி ரைபிள் கிளப்பைச் சார்ந்த டேவிட் சாமுவேல் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை டிஎஸ்பி ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முடிவில் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஷமீமா பர்வின் நன்றியுரை ஆற்றினார்.