தென்காசி மாவட்ட காவல் துறையினருக்கு சேமநலநிதி-எஸ்.பி. வழங்கினார்
1 min read
Welfare Fund for Tenkasi District Police Department-S.P. provided
28.5.2024
தென்காசி மாவட்ட காவல் துறையினருக்கு சேமநல நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் வழங்கினார்.
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 15 நபர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் காவலர் சேமநலநிதி உதவித்தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
முடிவில் மருத்துவ செலவு தொகை, சேமநலநிதி உதவித்தொகை பெற்றுக் கொண்ட தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.