100சதவீதம் குழந்தை திருமணம் இல்லாத ஊராட்சிகளுக்கு விருது
1 min read
Award for 100 percent child marriage free panchayats
29.5.2024
தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப் படுவதை தடுத்தல். பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்துதல் ஆகும். தென்காசி மாவட்டத்தின் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதமானது 952 ஆக உள்ளது. எனவே இதனை அதிகரிக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையுடன் காவல்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
காவல் துறை மூலமாக பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் மற்றும் மாணவிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று காவல்துறை செயல்பாடுகள் பற்றி அறிய செய்ய வேண்டும். கல்வித்துறை மூலமாக மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் பயிற்சி, படிப்பை இடைநிறுத்திய பெண் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் கல்வி பயிலவும் உயர்கல்விக்கும் ஊக்குவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
சுகாதாரத்துறை மூலமாக முன் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள் சட்டம் 1994 பற்றி போதிய விழப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மற்றும் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வாயிலாக அனைத்து காப்பத்தையும் பதிவு செய்து கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலம் வரை தொடர் கவனிப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஊராட்சி அளவில் ஊராட்சிமன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு அமைக்கப்பட்ட குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்பு குழுவின் கூட்டமானது மாதம் மாதம் நடைபெறுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
குழந்தை திருமண தடைச் சட்டம்-2006 தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணான 1098யை அனைத்து பொதுவெளிகளில் விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தவும் மற்றும் கிராம FLIT கூட்டங்களில் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதை தடுக்கும் சட்டதை (POCSO ACT 2012) வலுவாக கண்காணித்து செயல்படுத்தி பெண்குழந்தை களின் பிறப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய உறுதிமொழி ஏற்க வேண்டும். மேலும் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் அதிகரிக்கும் ஊராட்சிகள் மற்றும் 100% குழந்தை திருமணம் இல்லாத ஊராட்சிகளுக்கு பரிசு மற்றும் விருது வழங்கப்படும் என மாவட்டஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.