சிலம்ப போட்டியில் உலக சாதனைகீழச்சுரண்டை மாணவிக்கு ஊக்கத்தொகை
1 min read
World Record in Cymbal Competition Scholarship for underprivileged student
29.5.2024
உலக சாதனை சிலம்ப போட்டியில் வெற்றி வெற்ற கீழ சுரண்டையை சேர்ந்த மாணவியை திமுக சார்பில் பாராட்டி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் வழங்கினார்.
தென்காசி மாவட்டம், கீழச்சுரண்டையைச் சேர்ந்த திமுக பிரதிநிதி சுதாகர் என்பவரின் மகள் ஸ்ரீனிகா (வயது 13). 8ம் வகுப்பு மாணவியான இவர் ராஜபாளையத்தில் நடைபெற்ற கிரகாம்பெல் உலக சாதனை சிலம்ப போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து அம்மாணவியை தென்காசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டிய தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், மாவட்ட திமுக சார்பில் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.
மேலும் அம்மாணவிக்கு கிரீடம் அணிவித்து, இது போன்று பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.