ஆலங்குளம் அருகே கத்திமுனையில் 17 வயது சிறுமியை கடத்த முயன்ற 3 பேர் கைது
1 min read
3 people arrested for trying to kidnap a 17-year-old girl in Kathimoona near Alankulam
30.5.2024
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அரிவாள், கத்தி முனையில் 17 வயது சிறுமியை கடத்த முயன்ற 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியதுரை என்பவரது மகன் கணேசன்(வயது 25). இவர் ஆலங்குளம் அருகிலுள்ள மற் றொரு கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கணேசனை கண்டித்துள்ளனர்.
இருப்பினும் அந்த சிறுமியை கடத் திச் சென்று திருமணம் செய்யும் எண்ணத்தில் கடந்த 26ம் தேதி இரவு கணேசன் மற்றும் மருதப்பபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான சுப்பையாபாண்டி என்பவரது மகன் ராஜ்கிரண் (வயது 26), இசக்கிபாண்டி என்பவரது மகன் வேல்முருகன் (வயது 26) ஆகியோர் இரு பைக்குகளில் அந்த சிறுமியின் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் வீட்டை சுற்றி அரிவாள் மற்றும் கத்தியுடன் நின்று வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அங்கு ஆட்கள் நடமாட்டம் குறைந்தவுடன் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை கடத்த திட்டமிட்டு காத் திருந்துள்ளனர்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கணேசன், ராஜ்கிரண், வேல்முருகன் ஆகியோரை சுற்றி வளைத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே சிறுமியை கடத்த முயன்ற இளைஞர்கள் பொதுமக்களிடம் அரிவாள், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணேசன், ராஜ்கிரண், வேல்முருகன் ஆகியோரை கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.