நெல்லையில் சமோசா கடையில் சிலிண்டர் வெடித்தது- 6 பேர் காயம்
1 min read
Cylinder blast at Samosa shop in Nella – 6 injured
30.5.2024
நெல்லை மாவட்டம் டவுண் வடக்கு ரத வீதியில் சமோசா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் செயல்பட்டுவந்த கடையில் இன்று மாலை சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அப்போது திடீரென சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் வெடித்ததில் கடை எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.