நரேந்திர மோடி, ராகுல் காந்தி வெற்றி
1 min read
Narendra Modi, Rahul Gandhi win
4/5/2024
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடி முன்னனிலையில் இருந்து வந்தார். இறுதியில் அவர் வெற்றிபெற்றார்.
பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்் நிலையில் உள்ள வேட்பாளர்கள் விவரம்:-
ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, சந்திர பிரகாஷ் ஜோஷி, தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா, ஓம் பிர்லா, கரண் பூஷன் சிங், கிரண் ரிஜூஜூ
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதி ஆகி விட்டது.