நடிகர் சுரேஷ் கோபி, மத்திய மந்திரியாக பொறுப்பேற்க மறுப்பா?
1 min read
Actor Suresh Gopi refused to accept the day after he took over as Union Minister
10.5.2024
மத்திய அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நடிகர் சுரேஷ் கோபி, இன்று திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், அவரை தவிர, 71 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். கூட்டணி கட்சிகளில், 11 பேருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாரின் கட்சிகளில் தலா இரண்டு பேருக்கும், மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்ற நடிகர் சுரேஷ் கோபியும் அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், இன்று தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மலையாள தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ”திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதால் எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்.
எனவே என்னை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்” என்று சொன்னதாக தகவல் வெளியானது. ஆனால் இதை சுரேஷ் கோபி மறுத்துள்ளார். தனது டிவி பேட்டி தவறாக புரிந்து கொண்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமர் மோடி தலைமையில் தான் பணியாற்றுவதை பெருமையாக கொள்கிறேன் என்றும் அதன் மூலம் கேரளா வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றும் அவர் கூறினார்.