மோடியின் புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் இடம் பெறவில்லை
1 min read
Many ex-ministers are missing from Modi’s new cabinet
10.5.2024
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலர் இடம் பெறவில்லை
மூன்றாவது முறை நாட்டின் பிரதமராக நேற்று (ஜூன் 09) மோடி பதவியேற்றுக் கொண்டார். மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவ்பதி முர்மு மோடி உட்பட அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் சென்ற அமைச்சரவையில் இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் இந்த முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முப்பதுக்கும் அதிகமான முன்னாள் அமைச்சர்கள் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
ஸ்மிரிதி இரானி, அனுராக் தாகூர், ராஜிவ் சந்திரசேகர், அர்ஜுன் முன்டா, நாராயண் ரானே, மீனாட்சி லேகி, விகே சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இம்முறை அமைச்சரவையில் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பளித்ததால் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.