July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

விக்கிரவாண்டி தொகுதி சந்திக்கும் இரண்டாவது இடைத்தேர்தல்

1 min read

Vikravandi constituency will face the second by-election

10.5.2024
விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

புகழேந்தி மறைவையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின்போதே விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இத்தொகுதியில் மீண்டும் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கடந்த முறை போல இங்கு அ.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இங்கு தி.மு.க வெற்றி பெற்றது. அப்போது பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

என். புகழேந்தி (தி.மு.க.) – 93,730
ஆர்.முத்தமிழ்செல்வன்(அ.தி.மு.க.)- 84,157
ஷீபா ஆஸ்மி(நாம்தமிழர்)- 8216
அய்யனார்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)- 3053

2019- இடைத்தேர்தல்

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்ததால் இங்கு 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.
வாக்கு விவரம் வருமாறு:-

முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.)- 1,13,766

என்.புகழேந்தி (தி.மு.க.)- 68,842

கந்தசாமி (நாம்தமிழர்)- 2912

2016 சட்டசபை தேர்தலில் வாக்கு விவரம்

கே.ராதாமணி (தி.மு.க.)- 63757

ஆர்.வேலு (அ.தி.மு.க.) -56,845

சி.அன்புமணி (பா.ம.க) 41,428

ஆர்.ராமமூர்த்தி( மார்க்சிஸ்ட் கம்யூ)- 9981

எஸ். ஆதவன் (பா.ஜ.க.) – 1291

நோட்டா -1385

2011 சட்டசபை தேர்தலில் வாக்கு விவரம் வருமாறு

ஆர்.ராமமூர்த்தி( மார்க்சிஸ்ட் கம்யூ)-76,656

கே.ராதாமணி (தி.மு.க.)-63,756

கே.ராமமூர்த்தி (சுயே) -2442

ஏ.கண்ணதாசன்( புரட்சி பாரதம்)- 2212

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.