கன்னியாகுமரி, தூத்துக்குடி கடற்கரைக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை
1 min read
Warning not to go to Kanyakumari and Thoothukudi beaches
10.5.2024
கன்னியாகுமரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும் அறிவுத்தல் வழங்கி உள்ளார்.