ஆலங்குளம்: பிரபல திருடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
1 min read
Alankulam: Notorious thief arrested under the Gangster Prevention Act
12/5/2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த திருடனை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி செய்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சொர்ணம் என்பவரின் மகன் ரமேஷ் (எ) ராமையா (வயது 38) என்பவரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி குற்றவாளி மீது தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 75 க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது..