நெல்லையில் பாஜக வெல்ல கலவரம் என பேசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
1 min read
Hindu People’s Party executive arrested for saying riot to win BJP in Nella
12.5.2024
தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் இங்கு பாஜக காலூன்ற முடியும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து பானை போலீசார் + பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிந்து இந்து மக்கள் கட்சி மாதில துணை தலைவரை கைது செய்தனர்.
நெல்லையைச் சேர்ந்த பாஜ கிழக்கு மாவட்ட தலை வர் தமிழ்ச்செல்வனுடன், நெல்லை வண்ணார் பேட்டையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் உடையார் (வயது 48) நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவு பற்றி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளி யானது. இதில் உடையார் பேசியதில் கலவரம் செய் தால்தான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும் என்று பேசியது சமூகவலைதளங்க ளில் வைரலாக பரவியது இதுகுறித்து பாளையங் கோட்டை காவல் நிலை யத்தைச் சேர்ந்த எஸ்ஐ துரைப்பாண்டியன், இன்ஸ் பெக்டர் முத்துகணேசிடம் அளித்த புகாரில், நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி யின் மாநில துணை தலைவர் உடையார். நெல்லையைச் சேர்ந்த பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனு டன் போனில் பேசுகையில், கலவரம் செய்தால் தான் தமிழகத்தில் பாஜகாலூன்ற முடியும் என்று பேசியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன்மூலம் பொதுமக்களி டையே அவர் கலவரத்தை தூண்டி விடுவதால் அவர் மீது சட்டப்படியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு மண்டலம்) ஆதர்ஷ் பச்சேரா, பாளை சரக போலீஸ் உத கமிஷனர் பிரவீன் பாளை இன்ஸ்பெ டர் முத்துகணேஷ் ஆகியோர் விசாரணை நடத் தினர். இதன் பேரில் போலீசார் நேற்று இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் உடையார் மீது தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பது, அ தூறாக பேசியது, மிரட்டல் விடுப்பது உட்பட 4 பிரிவுக ளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சி நிறுவ னர் தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் மாவட்ட தலைவருமான உடையார் இந்து மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று தொலைபேசி உரை யாடலில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் பாஜ கட்சியின் உள் விவகாரங்களில் இந்து மக்கள் கட்சி தலையிடுவது இந்து மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். பாஜக மாவட்ட தலைவரோடு தான் நடத்திய உரையாடலை பதிவு செய்து பொது வெளியில் வெளியிட்டு இந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக் கப்பட்டு இந்து மக்கள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அவரிடம் 90 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்சி நிர்வாகிகள் யாரும் அவரோடு இணைந்து செயல் பட்டால் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.