தென்காசியில் ரூ.650 கோடியில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு திட்ட அறிக்கை
1 min read
Project report for new medical college in Tenkasi at Rs 650 crore
12.5.2024
தென்காசியில் ரூ.650 கோடியில் அமைய உள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் துவக்க உள்ளது. இதற்காக 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டு நிலவ ரப்படி 38 அரசு மருத்துவக்கல்லூரிகள், 36 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என 74 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாவட்டத் திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி வீதம் விடுபட்ட மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள்
அமைக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள் எது இதற்காக தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
தேசிய மருத்துவ ஆணையம் சில மாதங்களுக்கு முன் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கியது. இதன்படி படி மயிலாடு துறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய உள்ளன. இதில் முதற்கட்டமாக தென்காசி மருத்துவக்கல்லூரிக் கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவங்க உள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தென்காசியில் அமைய உள்ள மருத்து வக்கல்லூரிக்கான 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக ரூ.650 கோடியில் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அரசிடம் இருந்து ஒப்பு தல் கிடைத்துள்ளது.
இதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் துவக்க உள்ளோம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகள், மருத்துவ கல்லூரிக்கான விடுதி, நவீன உபகரணங்க ளுக்கான செலவு துவங்கி அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். 3 மாதங் களுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிட் டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.