தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு தாக்கல்
1 min read
Vijaya Prabhakaran filed a petition in the Election Commission
12.5.2024
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.இதனை தொடர்ந்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், விருதுநகரில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார். விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் தொடர்பாக அவர் புகார் மனு அளித்துள்ளார்.